முன்னணி நடிகர் தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்

முன்னணி நடிகர் தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்


சினிமாவிலும் நடிகர்களுக்கு நல்ல படங்கள் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும், பல படங்கள் முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை வரை சென்று கடைசி நேரத்தில் கை மாறிய கதைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அப்படி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கை மாறி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.
ரோஜா:
அரவிந் சாமிக்கு பதிலாக முதலில் ராஜீவ் மேனன் என்பவர் தான் நடிக்க இருந்தது.

எந்திரன்:
எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் தான், பின்னர் தான் எப்படியோ ரஜினிக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது.
சூது கவ்வும்:
விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு பதிலாக வடிவேலுவை தான் கமிட் செய்ய நினைத்தார்கள், ஆனால் அவர் இந்த வாய்ப்பை கண்டு கொள்ளாததால் விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.

அனேகன்:
தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த அனேகன் பட சப்ஜெக்ட் முதலில் விஜய்க்கு தான் எழுதப்பட்டதாம், அவரை கமிட் செய்ய முடியாத காரணத்தினால் இந்த வாய்ப்பு தனுஷிற்கு சிக்கி கொண்டது.

ராஜா ராணி:
ராஜா ராணி படத்தில் முதலில் ஜெய்க்கு பதிலாக சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார், ஆனால் அப்போது படத்தின் பட்ஜெட் பெரிதாகி விட்டதால் வளர தொடங்கிய சிவாவை ஒதுக்கி விட்டாராம் அட்லீ.

சந்திரமுகி:

சந்திரமுகி படத்தில் முதலில் சிம்ரன் தான் நடிக்க இருந்தது, ஆனால் அவர் கர்ப்பமாகி விட்டதால் மறுத்து விட்டார், பின்னர் ஜோதிகா அந்த காப்பாத்திரத்தை மிரட்டி தெறிக்க விட்டாராம்.

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் முழுப்படம்-விஜய் சேதுபதியின் “எடக்கு”

இது உங்களுக்கு தெரியுமா?