Posts

Showing posts from September, 2017

ஒரே இரவில் முழுப்படம்-விஜய் சேதுபதியின் “எடக்கு”

Image
ஒரே இரவில் முழுப்படம் - விஜய் சேதுபதியின் “ எடக்கு ” கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி . ஏற்கனவே சமீபத்தில் ‘ கவண் ’ , ‘ விக்ரம் வேதா ’ , மற்றும் புரியாத புதிர் ஆகிய விஜய்சேதுபதி படங்கள் வெளியாகியுள்ள நிலை வரும் வெள்ளி அன்று ‘ கருப்பன் ’ திரைப்படமும் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது . இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான கன்னட படம் ஒன்று தற்போது டப்பிங் செய்யப்பட்டு ‘ எடக்கு ’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது . ஒரே இரவில் நடக்கும் த்ரில் படமான இந்த படத்தில் வசந்த் மற்றும் நயன்கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்த போதிலும் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை கணக்கில் கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த படத்தை ஷிவன் என்பவர் இயக்கியுள்ளார் .

முன்னணி நடிகர் தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்

Image
முன்னணி நடிகர் தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள் சினிமாவிலும் நடிகர்களுக்கு நல்ல படங்கள் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும் , பல படங்கள் முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை வரை சென்று கடைசி நேரத்தில் கை மாறிய கதைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல . அப்படி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கை மாறி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க . ரோஜா : அரவிந் சாமிக்கு பதிலாக முதலில் ராஜீவ் மேனன் என்பவர் தான் நடிக்க இருந்தது . எந்திரன் : எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் தான் , பின்னர் தான் எப்படியோ ரஜினிக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது . சூது கவ்வும் : விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு பதிலாக வடிவேலுவை தான் கமிட் செய்ய நினைத்தார்கள் , ஆனால் அவர் இந்த வாய்ப்பை கண்டு கொள்ளாததால் விஜய் சேதுபதிக்கு கிடைத்தது . அனேகன் : தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த அனேகன் பட சப்ஜெக்ட் முதலில் விஜய்க்கு தான் எழுதப்...